Tuesday, October 10, 2023

அச்சியில் மீண்டும் ஒரு பதிப்பு

 அச்சியில் மீண்டும் ஒரு பதிப்பு

22.09.2023.... திருமதி மாரியம்மாள் சூரிநாராயணன் அவர்களின் பணி நிறை மலரில் ஒரு படைப்பு ..... 


  

   

நன்றி......
தேசிய வகை குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளி, 
நினைவு மலர் குழுவினர்க்கு .

Tuesday, October 3, 2023

சிந்திக்கச் செயல்பட- 3

சிந்திக்கச் செயல்பட - 3


நல்லதோர் வீணை செய்தே - அதை              நலங்கெடப் புழுதியிலெறிவருதுண்டோ? 

சொல்லடி, சிவசக்தி !~ எனைச்
     சுடர்மிகு மறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
     மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி - நிலச்
     சுமையென வாழ்ந்திட புரிகுவையோ? 

விசையுறுப் பந்தினைப்போல் - உள்ளம்
     வேண்டியபடி செலும் உடல் கேட்டேன்
நசையறு மனங்  கேட்டேன், - நித்தம்
    நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன் 

    தசையினச் தீச்சுடினும் - சிவ
சக்தியினை பாடும் நல்லகங்  கேட்டேன்
    அசய்வறு மதி கேட்டேன்; - இவை
அருள்வதில் உனக்கெதுந்  தடையுளதோ 



பாரதி வேண்டுவது:
சுடர்மிகு அறிவுடன் பிறந்துவிட்ட என்னால்  இவ்வுலகம் பயன் பெறவேண்டும். இல்லையேல் நான் பிறந்த இம்மண்ணுக்குச் சுமையாக இருப்பதில் அர்த்தமில்லை. அதற்கு நான் வேண்டியபடி செயல்பட மனம் கேட்கிறேன். அதைச் செயல்படுத்த உடல் வேண்டும், உயிர் வேண்டும்.  என் தசையினைத் தீச்சுடும் போதும் உன்னைப் பாடும் உள்ளம் வேண்டும். அதை அருள்வதில் உனக்கு ஏதும் தடை  இருப்பதற்கில்லை. என் வேண்டுதல் கிடைக்காதனில் நல்ல வீணையைச் செய்து அதைப் புழிதியில் எறிவது போலாகும்.

Tuesday, May 16, 2023

மலேசிய வாழ் அனைத்து ஆசிரியருக்கும் 
எமது ஆசிரியர் தின வாழ்த்துகள்
16.05.2023

2023 ஆசிரியர் தின வாழ்த்துக் கவிதை.

இக்கவிதை என்னைச் செதுக்கியச் சிற்பிகள் அனைவருக்கும் சமர்ப்பணம்.






 

Friday, April 7, 2023

மீண்டும் எழுத்துக்கு ஓர் அங்கிகாரம்...

 தமிழ்க்கல்வி கலை கலாச்சார சங்கத்தின் 

ஏற்பாட்டில் 

முதலாம் அனைத்துலக 

ஔவை தமிழ் இலக்கிய மாநாடு 

2023

நாள்     :    25  &   26 பிப்ரவரி 2023

இடம்     :     மலாயாப் பல்கலைக் கழகம், கோலாலம்பூர், மலேசியா.