அன்பு.....
சும சாமி12042022
அம்மா
அன்பு காட்டி என்னை
அரவணைத்து வளர்த்தாயே
அறிவு பசி எனக்கு...
அதை அறிந்து என்னை
அனுதினமும் உழைத்து
அனைத்தும் நான் கற்க செய்தாயே
அன்னாந்து பார்க்கும் உயரம்
அதை நான் தொடும் போது
அனாதையாய் என்னை விட்டு
அடுத்த ஜென்மம் எடுக்க சென்றாயோ!
சுமசாமி
07082021
கோவிட்- 19
கிழக்கே பிறந்தாய்
திசை எங்கும் விரைந்தாய்
கோரமாய் வந்தாய்
வினோதக் காட்சி தந்தாய்
உலக வாழ் மக்களை
உதிரம் உறைய வைத்தாய்
ஊரடங்கு உரைக்க வைத்தாய்
மானிடன் அளாவதை குறைத்தாய்
ஊரே அடக்கி வைத்தாய்
அமைதியை எங்கும்
உலாவ செய்தாய்
சிரித்துப் பேசி மகிழ்ந்த
குதுகலமாய் விளையாடிய
கூட்டம் எங்கே
இறைவா ........
ஏன் ... ?
கொரோனா
ஆம்
அதுதான் பதில்...
சுமசாமி
27042020

.jpg)
No comments:
Post a Comment