Thursday, January 18, 2024

சிந்திக்க சில நிமிடங்கள் - 1

இருமொழி திட்டம் (டி.எல்.பி) (DUAL LANGUAGE PROGRAMME [DLP] )



'டி.எல்.பி'  வேண்டும் என்று  அழுத்தம் கொடுப்பது பெற்றோர்களே.  மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பதால் பள்ளி நிர்வாகங்களும் அதை இப்பொழுது வரவேற்கத் தலைப்படுகின்றனர்.
பின் விளைவுகளை யாரும் சித்திப்பதாகத் தெரியவில்லை.






தரம்



'டி.எல்.பி'யினால்  பள்ளியில் கல்வித் தரம் அதிகரிக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.


 
வீட்டில்  முதல் மொழியாக ஆங்கிலம் அல்லது ஆங்கிலம் கலந்த தமிழ் பேசும் குழந்தைகளுக்கு அறிவியல் கணிதம் ஆங்கிலத்தில் போதிக்கப்படும் பொழுது ஓரளவு புரியும் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் உள்ளுணர்ந்து மூளைக்கு வேலை கொடுத்துப் படிக்க வேண்டடிய பாடங்கள் அறிவியலும் கணிதமும். எனவே ஆங்கிலத்தில் படித்துக் கொடுத்தாலும் அறிவியல் கணிதத்தில் வெற்றி பெறுவார்கள் என்பதற்கும் உத்தரவாதமில்லை.
ஆங்கில மோகம் கொண்ட தரப்பினர்ளே ஆங்கிலத்தில் கணிதம் அறிவியல் பாடங்களைப் படித்துக் கொடுக்க வேண்டும் என்கின்றனர். 
'டி.எல்.பி'யினால் பிள்ளைகள் ஆங்கிலத்தில் கூடுதல் சரளம் காட்டுவார்கள். ஆனால் அறிவியல் கணிதப் பாடத்தில் அதனால் அவர்கள் கெட்டிக்காரர்களாய் வருவார்கள் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.
ஆங்கிலத்தில் போதிக்கும் ஆசிரியர் அரைகுறை ஆங்கில அறிவு கொண்டவராக இருந்தால் அறிவியல் கணிதம் இரண்டிலும் மாணவர்கள் தரம் வீழ்ந்து விடும்.





















தமிழ் மொழி


'டி.எல்.பி'யினால் இதுநாள் வரை தமிழில் அறிந்து வைத்திருந்த அறிவியல் கணிதம் தொடர்பான அனைத்துக் கலைச்சொற்களும் காணாமல் போய்விடும். நமக்கு முன்னாடி இருந்த தலைமுறை பாடுபட்டு உருவாக்கிய கலைச்சொற்களை இழந்து ஆங்கிலத்தில் படித்தால் அறிவு பெருகும் வேலைகிடைக்கும் என்று முட்டாள்தனமாக நினைக்கும் பலரால் காத்திருக்கிறது தமிழுக்கு ஆபத்து. 
பாலூட்டி (mammals), சேங்கோணம்(right angle) போன்ற சொற்களை மறந்துபோய் அருங்காட்சியகத்தில் (museum) தேடிக் கொண்டிருக்கும் எதிர்காலத் தமிழ் தலைமுறை.











வேலை வாய்ப்பு



ஆரம்பப் பள்ளியில் தமிழில் எல்லாப் பாடத்தையும் படித்துவிட்டு விஞ்ஞானியாக, டாக்டராக, பேராசிரியராக, வழக்குரைஞராக, அக்கவுண்டனாக பல்லாயிரக்கணக்கானோர் இருக்கிறார்கள். 
ஆங்கிலத்தில் படித்துவிட்டு குப்பைக்கூட்டிக் கொண்டு இருப்பவர்களும் இருக்கிறார்கள்.








வேலை  வாய்ப்பு பெறுவதற்கு தேவை அறிவு. தமிழில் படித்திருந்தாலும் அறிவியலில் கெட்டிக் காரராக இருந்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும்.