Thursday, December 29, 2022

அச்சுயில் ஒரு பதிவு....




 
 18.12.2022 வெளியிடு கண்டது.... ஓர் அங்கிகாரம். 

இடம்                         :     நேதாஜி மண்டபம், மஇகா தேசிய வளாகம், 
சிறப்பு வருகை    :     மாண்புமிகு டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அவர்கள்
                        மஇகாவின் தேசிய துணைத் தலைவர்

என் எழுத்துத்  துறையில் முதல் அச்சுப் பதிப்பில் கிடைத்த ஓர் அங்கிகாரம்..... 
நன்றி......பா. இராமு அறக்கட்டளை குழுவினர்க்கு.
தமிழ் இலக்கியக் காப்பகம், மலேசியா.

Tuesday, April 12, 2022

சிந்திப்போம் செயல்படுவோம் 2

அன்பு.....

அள்ளி அள்ளி கொடுக்கும் போது
அமிர்தமாக இருக்குமே!
கொடுப்பவருக்கோ பெருமை
பெற்றவருக்கோ அருமை
இருப்பினும்
ஏனோ 
என்றுமே  அமிர்தமாக 
இனிப்பதில்லையே
ஏன்....?
அமிர்தம் கூட 
ஒரு நாள் விஷமாக மாறுமோ....
விஷமாக மாறும் அன்பு என்ற 
அமிர்தம்
பெற்றவரை உடனே
கொன்றால் சிறப்பாகுமே...
கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளும் போது
என்ன சொல்வது...
அன்பு என்பது ..
ஓர் ஆயுள் தண்டனையோ....
பெற்ற நபருக்கு.......

Monday, January 24, 2022

சிந்திப்போம் செயல்படுவோம்

 கட்டளை - நேர்மறை எதிர்மறை

ஒருவருக்குக் கட்டளைகள் கொடுக்கும் போது, பொதுவாகவே கூடாது, வேண்டாம், முடியாது, 'ஏ' கர ஓசையில் முடிதலிலான சொற்கள் பயன்படுத்துவோம். இது எதிர்மறை பண்புகள் கட்டளைகள் என பொருள்படும். 

அதுவே மாற்று வழி கொண்ட கட்டளைகளாக இருப்பின், அது  நேர்மறை பண்புகள் கொண்ட கட்டளைகள் ஆகும். 


உதாரணம்:

இங்கே குப்பையைப் போடாதே - எதிர்மறை

இங்கு குப்பைப் போடவும் - நேர்மறை


சத்தம் போடாதே - எதிர்மறை

அமைதியாக இருங்கள் - நேர்மறை


புற்களின் மேல் நடக்காதே - எதிர்மறை

நடைப்பாதையில் நடக்கவும் - நேர்மறை